மயிலாடுதுறையில் ரசாயனம் கலந்து விநாயகர் சிலை செய்வதாக புகார்
மயிலாடுதுறையில் ரசாயனம் கலந்து விநாயகர் சிலை செய்வதாக புகார், விநாயகர் சிலை செய்யும் இடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையைத் தொடர்ந்து, 10 சிலைகளை பறிமுதல் செய்து மீதமுள்ள சிலைகளை ஒப்படைத்தனர்.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மூங்கில் தோட்டம் என்ற பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்ட நிலையில், ஒரு சிலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் சேர்த்துள்ளதாக தெரிவித்து விநாயகர் சிலை செய்யும் இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன்
ரசாயனம் கலந்த 10 சிலைகளை பறிமுதல் செய்து உத்தரவிட்டார் மீதமுள்ள சிலைகளை வழிபாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதித்தார்.
இதனை எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக வாகனங்களில் பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.


