சத்ததால் அதிரும் கோவை….TVK கட்சியின் தலைவர் நடிகர் தளபதி இன்று கோவை வந்தார்..
TVK கட்சியின் தலைவரான நடிகர் தளபதி இன்று பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கோவை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய்க்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுமார் காலை 9 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு வந்தார் தலைவர் விஜய் இன்று கோவையில் நடக்கும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கோவையில் கூடியுள்ளனர்.
இந்த ஏழு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களால் இன்று கோவை ஸ்தப்பித்து போயிருக்கிறது கூட்ட நெரிசல் காரணமாக கோவை தத்தளிக்கிறது .கோவையில் எங்கு திரும்பினாலும் TVK ரசிகர்கலும் தொண்டர்களும் தென்படுகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் தளபதி விஜய் வந்து இறங்கியவுடன் விமான நிலையத்தின் வெளியில் நிற்கும் தொண்டர்களும் ரசிகர்களும் TVK …வுக்கு வெற்றி, தளபதி விஜய் வாழ்க என்று கோஷமிட கோவை விமான நிலையம் சத்ததால் அதிர்ந்தது .சத்தம் காத கிழிகிறதா?? என்று விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் போட்டு இருக்கிறார்.