in

பிச்சாடனக் கோளத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் சொக்கநாதர்

பிச்சாடனக் கோளத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் சொக்கநாதர்

 

பிச்சாடனக் கோளத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் சொக்கநாதர் – மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏழாம் நாளில் அன்னை மீனாட்சி இன்றி பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி பக்தர்கள் தரும் பணத்தை திருவோடு ஏந்தி வசூல் செய்து வரும் சொக்கநாதர்.

உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா ஏழாம் நாளை முன்னிட்டு இன்று காலை அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட சொக்கநாதர் (சிறிய அளவிலான சட்டத்தேரில்) பிச்சாடனக் கோளத்தில் எழுந்தருளி வருகிறார்

வழிநெடுகளும் பக்தர்கள் சொக்கநாதரிடம் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

இன்று மாலை சொக்கநாதர் பிரியாவிடையுடன் நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அன்னை மீனாட்சி யாழிவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிக்க உள்ளனர்.

What do you think?

பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்குள் சோதனைக்கு பின்னரே பயணிகளை அனுமதி