in

பாஜகவிற்கு பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி.

பாஜகவிற்கு பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி.

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5-பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பொறுப்பாளர் மான்சுவிக் மாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், பாஜகவிற்கு பல்வேறு நிபந்தனைகளை பேச்சுவார்த்தை குழு மூலம் முதலமைச்சர் ரங்கசாமி வைத்துள்ளார்.

லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது..
பாஜக கூட்டணியில் தொடர் நிபந்தனை விதித்த முதலமைச்சர் ரங்கசாமி..
முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாஜக.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தின்படி பாரதிய ஜனதா கட்சி என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.

இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது இன்று(16ம்தேதி) இரவு இறுதி செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனியார் விடுதியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரான முதலமைச்சர் ரங்கசாமிக்காக காத்திருந்தார்.

ஏனாம் சென்று திரும்பிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஐவர் குழுவினை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.

மத்திய அமைச்சரை சந்தித்த இக்குழு லட்சிய ஜனநாயக கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி சேர்க்கக் கூடாது. அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாரதிய ஜனதாவில் சீட்டு வழங்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது ..

45 நிமிட சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த என் ஆர் காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, முதலமைச்சர் கூறிய தகவலை பாஜக தலைமையிடம் கூறியுள்ளோம். நாளை பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டம் தெரியவரும் என்று கூறினார் .பேட்டி.. அமைச்சர் லட்சுமி நாராயணன்..

இதனிடையே உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோரை மத்திய அமைச்சர் அவசரமாக அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, நாளை காலை 9 மணிக்கு தெரியும் என கூறி சென்றார்.

What do you think?

புதுச்சேரி அதிக இடங்களில் போட்டியிட விருப்பதால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

மதுரையில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி…