சிதம்பரம் நடராஜர் கோயில் மழை நீரால் நிரம்பிய சிவகங்கை குளம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆறு கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம் பூஜைக்கு முன்னர் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு அதில் உள்ள புனித நீரை கொண்டு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வர்.
இந்நிலையில் கட்டடக்கலையில் சிறப்பு வாய்ந்த அமைப்பு உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பெய்யும் மழை நீரை தானாகவே சிவகங்கை குளத்துக்கு வந்தடையும் வகையில் சிறப்பானதொரு நீர் மேலாண்மை செய்யப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் சிவகங்கை குளம் முழுமையாக நிரம்பி உள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புனிதமான சிவகங்கை குளம் நிரம்பியதை அடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து வருகின்றனர்.


