செல்லாண்டியம்மன் கோவில் மாசித் திருவிழா
செல்லாண்டியம்மன் கோவில் மாசித் திருவிழா தெப்பத்தில் எழுந்தருளி அம்மன் அருள் பாலித்தார்
திங்கட்கிழமை இரவு எட்டு முப்பது மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி திண்டுக்கல் பழனி சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு அருள்மிகு ஶ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா ஏழு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த வருட திருவிழா கடந்த ஜன.20.ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது.
பிப்.3ம் தேதி நள்ளிரவு அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு இரவு முழுவதும் வானவேடிக்கை, கரகாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இதையடுத்து வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி, எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தினம்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருவிழாவின் இறுதி நாளான திங்கட்கிழமை இரவு செல்லாண்டியம்மன் கோவில் தெரு சக்திவேல் குடும்பத்தார் சார்பாக தெப்ப திருவிழா நடைபெற்றது.
இதில் செல்லாண்டியம்மன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.


