in

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு புகை வண்டி சென்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு புகை வண்டி சென்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புகைவண்டி சந்திப்பில் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி புகைவண்டி பயணத்தின நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

ரயில் பயனிகள் சங்கத்தை சேர்ந்த கோவி சேதுராமன் பேசும் போது, சுதந்திரத்திற்கு முன்பே மயிலாடுதுறைக்கும் தரங்கம்பாடிக்கும் இடையே புகைவண்டி சென்று கொண்டு இருந்தது.

அதில் மன்னம்பந்தல், தரங்கம்பாடி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள்,மீணவ பகுதியிலிருந்து கருவாடு ஏற்றி மயிலாடுதுறை கருவாடு சந்தைக்கு வரும் மீனவர்கள் என பயனம் செய்த மக்கள் இன்றும் அந்த புகைவண்டி மக்களின் மனதில் ஓடி கொண்டு இருக்கிறது என்றும், மீண்டும் அந்த புகைவண்டியை இயக்கி காரைக்கால் வரை நீட்டித்தால் பக்தர்கள் நவக்கிரக கோயில்களுக்கு சென்று வர பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும் என பேசினார்.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் மற்றும் வர்த்தக சங்க பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

What do you think?

ஒரு புது போஸ்டரை ரிலீஸ் பண்ணிருக்காங்க படக்குழு 

மீண்டும் கிசுகிசுக்கள்  – நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையே பேசுபொருளாகி உள்ளன