திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபலங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபலங்கள் பலர் சுவாமியை தரிசித்தனர்.
இதில் டாட்டா குழு தலைவர் நடராஜன் சந்திரசேகர் ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா முன்னணி நடிகை ரவளி இசையமைப்பாளர் தமன் நடிகர் ஆதி சாய் குமார் மற்றும் நடிகர் அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் சுவாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்ததும் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதாசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி மரியாதை செய்தனர்.