in

காஞ்சிபுரத்தில் புத்தபூர்ணிமா திருவிழா

காஞ்சிபுரத்தில் புத்தபூர்ணிமா திருவிழா

 

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள புத்த விகாரில் நடைபெற்ற புத்தபூர்ணிமா திருவிழாவையொட்டி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது.

பகவான் புத்தர் பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் உயிரிழந்த நாள் ஆகிய மூன்றும் நடந்தது சித்ரா பௌர்ணமி நாளாகும். எனவே இந்த நாளை புத்த பூர்ணிமா விழாவாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள புத்த விகாரில் புத்த பூர்ணிமா விழாவையொட்டி புத்த பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தம்பாலா ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புத்த விகாருக்கு வந்திருந்த பக்தர்கள் பலரும் இரு புத்த பிக்குகளிடம் ஆசி பெற்றனர்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையிலிருந்து புத்த பிக்குகள் தலைமையில் புத்த விகார் வரை புத்தரின் சிலைகளுடன் பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் காஞ்சிபுரம் எம்.பி.க.செல்வம்,எம் எல் ஏ எழிலரசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக போதி தர்மரின் சந்ததியினராக அறியப்பட்ட உடையாளூர் ஜமீன் பரம்பரையினர் புத்த விகாருக்கு வந்து போதி தர்மரை வணங்கி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாக புத்த விகாரின் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

ஏற்பாடுகளை புத்த விகாரின் செயலாளர் ஜி.நாகராஜன், mபொருளாளர் எம்.கௌதமன் ஆகியோர் தலைமையிலாயன விழாக்குழுவினர் செய்திருந்தனர். நிறைவாக புத்த விகாரில் சிலம்பம், வர்மக்கலை, கராத்தே உள்ளிட்ட கலைகளால் கற்றுக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்த செயல் முறை விளக்கமும் நடைபெற்றது.

What do you think?

மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளுவென வைகையாற்றில் உற்சாகமாக குளித்து மகிழும் பொதுமக்கள்