in

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பிராய்லர் கோழி வியாபாரி

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பிராய்லர் கோழி வியாபாரி

பிராய்லர் கோழிகள் வாங்கியதற்கான 32 லட்சம் ரூபாயை தராமல் மோசடி செய்யும் திமுக வட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பிராய்லர் கோழி வியாபாரி

மதுரை மாநகர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராஜா என்பவர் பிராய்லர் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளளார்.

          

இந்த நிலையில் மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த திமுக 49 ஆவது வட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் மற்றும் அவரது தம்பியான திமுக நெல்பேட்டை இளைஞரணி அமைப்பாளர் சைபுல்லாகான் ஆகியோர் நடத்திய பிராய்லர் கோழி கடைக்கு 32 லட்சம் ரூபாய் மதிப்பு பிராய்லர் கோழி வழங்கியுள்ளார்

இந்த பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அமைச்சர்கள் பெயரை சொல்லி தொடர்ந்து மிரட்டுவதாகவும் கூறி காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து அங்குள்ள காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்திய நிலையில் மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

What do you think?

தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தா குளம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா

குடும்ப விவகாரத்தை”அரசியல் ஆக்காதீங்க!” விஜய் விஷயத்தில் குஷ்பூ சீற்றம்!