in

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு மரியாதை

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு மரியாதை

 

சத்திரக்குடியில் போகலூர் ஒன்றிய பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

தேசப்பற்றோடு கையில் மூவர்ண கொடியோடு பேரணியில் பங்கேற்று கவனம் ஈர்த்த மூதாட்டிகள்

நாடு முழுவதும் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் பல்வேறு பகுதிகள தேசியக் கொடியை ஏந்தியவாறு பாஜகவினரால் பேரணி ஊர்வலமானது நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி போகலூர் பாஜக ஒன்றிய தலைவர் ஏ.கே. கண்ணன் தலைமையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு  பிரமாண்ட பேரணியானது நடைபெற்றது.

நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த வீரமிகு சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரமிகு ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பேரணி ஆனது நடைபெற்றது.

இந்தப் பேரணியில் வயது முதிர்ந்த மூதாட்டிகளும் கூட தேசப்பற்றோடு கையில் தேசியக் கொடியோடு பேரணி ஊர்வலத்தில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம் மற்றொருபுறம் இந்தியாவின் இறையாண்மையைப் போற்றும் வகையில் தேசபக்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக”வந்தே மாதரம்”, பாரத் மாதா கி ஜே “இந்தியா வாழ்க” போன்ற கோஷங்கள்  எழுப்பப்பட்டு பேரணியானது நடைபெற்றது.

முன்னதாக இந்தப் பேரணியானது போகலூர் யூனியன் அலுவலகம் அருகாமையில் தொடங்கி சத்திரக்குடி நகரின் முக்கிய சாலையின் வழியாக வலம் வந்து நிறைவு பெற்றது பன்முகத்தன்மையையும்,  ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் சாதி சமயங்களை கடந்து தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக பேரணி நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சண்முகநாதன் போகலூர் ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துவேல் பாண்டியன் பாஜக நிர்வாகிகளான ராமச்சந்திரன், சத்யராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இந்தப் பேரணியை சிறப்பித்தனர்

What do you think?

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் மென்பொருள் கோளாறு கோட்ட மேலாளர் பேட்டி

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகள் சேதம்