in

பாஜக கூட்டணி ஆட்சி அமையும்…மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

பாஜக கூட்டணி ஆட்சி அமையும்…மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

 

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்…மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி.

புதுச்சேரி பாஜக பொதுக்குழு கூட்டம் பழைய துறைமுக வளாகத்தில் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வல்
ஆகியோர் பங்கேற்றனர்.

கட்சியின் மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமசிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி , அமைச்சர் ஜான்குமார் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,மற்ற கட்சிகளை விட பாஜக வித்தியாசமானது.
மற்ற கட்சிகள் குடும்ப கட்சியாகவும் தனி நபர் கட்சியாக உள்ளது..

பாஜக மட்டுமே மக்கள் கட்சி என்றும் புதுச்சேரியில் ஒவ்வொரு தொண்டனும் இணைந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் கூறினார்.

மேடை பேச்சு… மன்சுக் மாண்டவியா மத்திய தொழில்துறை அமைச்சர்..

தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாசித்தார்.

பிரதமரின் தாயாரை இழிவாக பேசி, ஒட்டுமொத்த நாட்டில் உள்ள பெண்களையும் தவறாக பேசிய ராகுலை பொதுக்குழு சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி தேர்தல் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும், பிரதமர் மீதும் பொய் குற்றம் சாட்டியதை பாஜக பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 ரூபாயிலிருந்து 2000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு பாராட்டு தெரிவித்த பொது குழு ரேஷன் கடைகளை திறந்து வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச கிலோ அரிசி வழங்குவதற்கும் பாராட்டு தெரிவித்தது..

What do you think?

வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உறியடி உற்சவம்

இசை உலகத்தின் ஜாம்பவான் எம் எஸ் சுப்புலட்சுமி