in

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா! “சீக்கிரம் குணமடைந்து வாங்க டைரக்டர் சார்!”


Watch – YouTube Click

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா! “சீக்கிரம் குணமடைந்து வாங்க டைரக்டர் சார்!”

 

தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படும் பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சினிமாவை ஸ்டுடியோவுக்குள்ளேயே முடங்கி கிடக்காமல், கிராமத்து மண் வாசனை மாறாமல் கேமரா முன்னாடி கொண்டு வந்த புரட்சித் தமிழன் இவரு.

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இப்போ மருத்துவமனையில் இருக்காரு. ஆனா, அவர் தரப்பிலிருந்து வந்த தகவல்படி, இது வெறும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை (Regular Checkup) தான் என்றும், அவர் இப்போ நலமா இருப்பதாகவும் சொல்லியிருக்காங்க.

கடந்த மார்ச் மாசம், பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. இந்தச் சம்பவம் பாரதிராஜாவை ரொம்பவே மனசு உடைச்சுப் போட்டுடுச்சு.

அதுக்கப்புறம் மலேசியாவுல இருக்கிற மகள் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துட்டு இப்போதான் சென்னை திரும்பினாரு. ’16 வயதினிலே’ படத்துல ஆரம்பிச்சு, ‘முதல் மரியாதை’, ‘அலைகள் ஓய்வதில்லை‘ன்னு எத்தனையோ காலத்துக்கும் அழியாத காவியங்களைக் கொடுத்தவர்.

ரஜினி, கமல் முதல் ராதிகா, ரேவதி என எக்கச்சக்க ஸ்டார்களை அறிமுகப்படுத்தியவர். சமீபத்துல கூட ‘திருச்சிற்றம்பலம்’ படத்துல தனுஷுக்குத் தாத்தாவா நடிச்சு நம்ம எல்லாரையும் ரசிக்க வச்சாரு.

இயக்குநர் இமயம் சீக்கிரம் முழு ஆரோக்கியத்தோட வீடு திரும்பணும்னு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சோஷியல் மீடியாவுல பிரார்த்தனை செஞ்சுட்டு வராங்க.

What do you think?

மலேசியாவில் கர்ஜித்த தளபதி! “சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன்!” ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் அதிரடி!

விஷால்!!! அதிரடி அறிக்கையால்!!.. கோலிவுட்டில் பரபரப்பு! மேனேஜருக்கு ‘ரெட் கார்டு’!!