பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுவாமியை தரிசித்தார்.
தரிசனத்திற்குப் பிறகு கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்க, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய பி வி சிந்து, திருமணம் நடைபெற்று ஓராண்டுக்கு பின் திருமலைக்கு வந்திருக்கிறேன்.

அடுத்து அடுத்து நடைபெற இருக்கும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட அருள் புரிய வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.

