in

செங்கம் அருகே தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி

செங்கம் அருகே தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி

 

தட்டி கேட்ட பெண் பயணிகளை அவதூறாக பேசிய மாணவர்களால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பேருந்து நிறுத்தியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் கூட்ரோடு சாலையில் வலசையிலிருந்து செங்கம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது குயிலம் கூட்ரோடு சாலையில் பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் அவதி அடைந்தாகக் கூறப்படும் நிலையில்

இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் மாணவர்களை பேருந்திற்கு உள்ளே செல்ல வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பெண் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பெண் பயணிகளை மாணவர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியதால் பெண் பயணியும் மாணவர்களை கண்டிக்கும்படி திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் பேருந்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை பேருந்திற்க்குள்ளே செல்ல வலியுறுத்தினார்.

அப்போதும் பேருந்திற்கு உள்ளே மாணவர்கள் செல்லாததால் ஆக்கிரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுனர் செங்கம் போளூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை குறுக்கே நிறுத்தி மாணவர்களின் செயலை கண்டித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சில மாணவர்கள் என்றதால் படிக்கட்டில் தொங்குவது பேருந்து மேற்குறையில் ஏறுவது ஓடும் பேருந்தில் அட்ராசிட்டி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்று பேருந்தில் அட்ராசிட்டி செய்யும் சில மாணவர்களின் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம்

பேருந்தின் படியில் வவ்வால் போல  தொங்கி வரும் பள்ளி மாணவர்கள்