in

மதுரை விமான நிலையத்தில் APL ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி

மதுரை விமான நிலையத்தில் APL ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி

 

மதுரை விமான நிலையத்தில் APL ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்றது. 11 அணிகள் பங்கு பெற்ற லீக் போட்டிகளில் தகுதி சுற்றின் அடிப்படையில் இறுதி போட்டி நடைபெற்றது.

மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மற்றும் பயண முனைய மேலாளர் சாம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்

மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைதானத்தில் ஏபிஎல் ஏர்போர்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது .

ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கன் அணி , ஏர் இந்தியா , விமான நிலைய இமிகிரேஷன் மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட 11 அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் நடைபெற்றது.

11 அணிகளுக்கான லீக் போட்டிகளில் முடிவுக்கு பின் தகுதி சுற்று மற்றும் கால் இறுதி அரை இறுதி போட்டிகள் நடை பெற்றது.

மத்திய விமான தொழில் பாதுகாப்பு படை AlASL, டெர்மினல், ஏர் இந்திய இமிக்ரேஷன், ஸ்ரீலங்கன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தகுதி போட்டியில்
அரையிறுதிபோட்டியில் CISF மற்றும் ஏர் இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஏர் இந்தியா ஸ்ரீலங்கா அணி 15 ஒவர் பந்துவீச்சில் 90 எடுத்தது.

பின்னர் பேட்டிங் செய்த மத்திய தொழில்பாதுகாப்பு படை அணி நான்கு விக்கெட் 13 ஒவர் முடிவில் 91 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது .

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மற்றும் பயண முனைய மேலாளர் சாம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

What do you think?

 கிருஷ்ணாபுரத்தில் 70 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

வடலூரில் திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்