மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆனி திருத்தேர் திருவிழா.
நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆனி திருத்தேர் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்.
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற பெருமாள் ஆலயமான மோகனுாரில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் ஆனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்.
அப்போது கருடன் படம் வரையப்பட்ட திருக்கொடியை பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தர்பை மாலை அணிவிக்கபட்டு தீபதுப உபசரிப்புகள் காண்பிக்கபட்டது.
அப்போது மூலவர் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் உற்சவ பெருமாள் சந்திரபிரபை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வரும் 30-6-2025 திங்கள் அன்று 7-ம் நாள் மாலை 4.30 to 6.00 மணிக்குள் திருக்கல்யாணமும் 9-ம் நாள் 2-7 -2025 புதன் அன்று அதிகாலை 5-15 க்கு ரதம் ஏறும் நிகழ்வும், காலை 9.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வும் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.