உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்த பயனாளிக்கு ஆணை வழங்கப்பட்டது
சித்தர்காட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்த பயனாளிக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு ஊராட்சியில் மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாம்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட
13 துறைகளை சேர்ந்த 43 சேவைகள் இந்த திட்ட முகாமில் மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுக்களை பெற்றனர்.

முகாமினை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில் பங்கேற்று பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மனு அளித்த பயனாளிக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கினார்.


