in

சகோதரன் மகன் காது குத்து விழாவிற்கு 15 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த அத்தை.

சகோதரன் மகன் காது குத்து விழாவிற்கு 15 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த அத்தை.

தாய்மாமன் சீர் வரிசைக்கு ஈடாக அத்தையின் சீர்வரிசை ஊர்வலத்தை ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்.

தென் மாவட்டங்களில் சகோதரி மகன், மகளின் விசேஷ நிகழ்ச்சிக்கு ஆட்டம் பாட்டத்துடன் தாய் மாமன் சீர்வரிசை வழங்குவது மிகவும் பிரபலமான ஒன்று ஆனால் தேனியில் தாய்மாமன் சீர்வரிசைக்கு ஈடாக அத்தையின் சீர்வரிசை தற்போது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் யுவஸ்ரீ தம்பதியினர் இவர்களின் ஜெய்ஹர்ஷித் – கிர்த்திகேயன் ஆகியோரின் காதணி விழா தாமரைக் குளம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பாண்டியராஜனின் சகோதரி பாண்டிசெல்வி தனது சகோதரன் மகன்களுக்கு சீர் வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்

மூன்று டிராக்டர்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் கரகாட்டம், தேவராட்டம், சென்ட் காவடி, மங்கி நடனம்.

குயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன் மேளம்தாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்க சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வருகை தந்து தனது சகோதரனின் மகன் காதுகுத்திற்கு சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

அப்போது மங்கி வேடமணிந்து நடனமாடிய நபருடன் அங்கிருந்த பொதுமக்கள் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வழக்கமாக தாய்மார் சீர்வரிசைகளுடன் விசேஷ நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக வரும் நிலையில் அதற்கு மாற்ற அத்தையின் பிரம்மாண்ட சீர்வரிசை ஊர்வலம் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

நடிகர்களுக்கு செக், வைத்த தயாரிப்பாளர் சங்கம்! ”சினிமாவா? ஓடிடியா?” பரபரக்கும் சினிமா உலகம்!

சிக்கியது குஷ்பூவின் போலி ஐடி! சைபர் கிரைமில் அதிரடிப் புகார்! நூதன மோசடி! ரசிகர்களுக்கு எச்சரிக்கை