in

வடமாநில கோவில் கட்டமைப்பை அகற்றிவிட்டு தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பில் கட்ட வேண்டும் அனைத்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

ரயில் நிலையத்தின் முகப்பில் கட்டப்பட்டு வரும் வடமாநில கோவில் கட்டமைப்பை அகற்றிவிட்டு, தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை ரயில் நிலையத்தின் முகப்பில் இருந்த பெரிய கோயில் மாதிரி வடிவமைப்பை அகற்றிவிட்டு தற்போது வட மாநில கோவில் அமைப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் தேசத் தன்னுரிமை கட்சி – காவிரித்தாய் இயற்கை வேளாண் உழவர் நடுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை ரயில் நிலையத்தின் முகப்பில் ஏற்கனவே இருந்த பெரிய கோவில் வடிவமைப்பை அகற்றிவிட்டு தற்போது வட மாநில கோவில் அமைப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வடமாநில கோவில் கட்டமைப்பை அகற்றிவிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

ரூ.50.லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் 16 பெருமாள் கிருஷ்ணர் நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது