in

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம்

 

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேறினை வதம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.

கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில் இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு, புதிய தேரில் எழுந்தருளி மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

சிவகாமி அம்மன் தேர் முன்பாக சிவ வாத்தியங்கள் முழங்க சிவன் பார்வதி வேடமிட்ட பக்தர்கள் சிவன் நடனம் ஆடியோபடி சென்றனர், இதனை பொதுமக்கள் பக்தர்கள் மெய் சிலிர்க்க பார்த்து சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பிக்பாஸ் தினேஷ் நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது

செங்கம் அருகே தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி