மக்களுடன் ஸ்டாலின் முகாமினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வருகை
“ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு செயலாளர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என்னிடம் படம் காட்டாமல் வரும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுங்கள்” என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கருங்குழி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் ஸ்டாலின் முகாமினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வருகை தந்து முகாமினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்பொழுது நிகழ்வில் பேசிய அவர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என்னிடம் படம் காட்டாமல் வருகின்ற பொது மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உறுதுணையாக அவர்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்த செந்தில்குமார் திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகர் மன்ற தலைவர் சிவகுமார் நகர செயலாளர் தன.தமிழ் செல்வன் கருங்குழி ஊராட்சி செயலர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


