த்ரிஷா பிறகு! இப்போ ஜாதி சர்ச்சையா? பார்த்திபனுக்கு வெடித்த புது குண்டு
தமிழ் சினிமாவுல ‘வித்தியாசமான மனிதர்’னு பேர் எடுத்த ஆர். பார்த்திபன், இப்போ அடுத்தடுத்த சர்ச்சைகள்ல சிக்கி சோசியல் மீடியாவுல ஹாட் டாபிக் ஆகியிருக்காரு. முதல்ல திரிஷா, இப்போ அவரோட ஜாதி அடையாளம்னு மனுஷன் அதிரடி கிளப்பிட்டு இருக்காரு. என்னாச்சுன்னு விவரமா பார்ப்போம்!கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மேடையில பேசின பார்த்திபன், நடிகை திரிஷாவை கிண்டல் பண்றதா நினைச்சு, “குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது” அப்படின்னு ஒரு கமெண்ட் அடிச்சாரு.
இது திரிஷா ரசிகர்களை செம கடுப்பாக்கிடுச்சு. “பெண்களை இப்படித்தான் உருவகப்படுத்தி பேசுவதா?”ன்னு நெட்டிசன்கள் அவரை வச்சு செஞ்சாங்க. இதுக்கு திரிஷாவும் நேரடியா பேர் சொல்லாம, “மரியாதை ரொம்ப முக்கியம் பாஸ்”ங்கிற ரேஞ்சுல ஒரு பதிலடி கொடுத்தாங்க.திரிஷா மேட்டர் ஓயுறதுக்குள்ள, இப்போ அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகிடுச்சு.
பவன் கல்யாண் நடிக்குற ‘உஸ்தாத் பகத் சிங்’ (Ustaad Bhagat Singh) படத்துல பார்த்திபன் ஒரு முக்கியமான ரோல் பண்ணிருக்காரு. அந்தப் படத்தோட புரமோஷன்ல பேசின பார்த்திபன், தன்னை அறிமுகப்படுத்திக்கிட்ட விதம் தான் இப்போ புது சர்ச்சையை கிளப்பிருக்கு.மேடையில மைக் பிடிச்ச பார்த்திபன், “நான் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.. நாயுடு அப்பாயி (நாயுடு வீட்டு பையன்)” அப்படின்னு தெலுங்குல பேசினாரு.
“நான் சென்னையில பிறந்து வளர்ந்ததால தமிழ் நல்லா பேசுவேன், தெலுங்கு கத்துக்கிட்டு வெற்றி விழாவுல தெலுங்குலயே பேசுவேன்”னு அவர் சொன்னாலும், அந்த ‘நாயுடு’ங்கிற ஜாதி அடையாளத்தை அவர் ஏன் மேடையில சொல்லணும்னு ஒரு தரப்பு கொந்தளிச்சுப் போய் கேள்வி கேக்குறாங்க.”இவ்வளவு பெரிய சீனியர் கலைஞர், பொது மேடையில ஜாதி அடையாளத்தைச் சொல்றது தேவையற்றது,
இது சமூகத்துல தப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்”னு நெட்டிசன்கள் ஒரு பக்கம் விளாசுறாங்க. ஆனா அவரோட ரசிகர்கள் சிலரோ, “அவர் தன்னோட அடையாளத்தைச் சொல்றதுல என்ன தப்பு? இதை ஏன் இவ்வளவு பெருசு பண்றீங்க?”னு சப்போர்ட் பண்ணிட்டு வர்றாங்க.
தன்னோட படங்களை விட இப்போ தன்னோட பேச்சாலயே அதிகமா செய்திகள்ல வர்ற பார்த்திபன், இந்த புது சர்ச்சைக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போறாருன்னு கோலிவுட்டே ஆவலா காத்துட்டு இருக்கு!


