in

கோஃபெபோசா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை ரன்யா ராவ்

கோஃபெபோசா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை ரன்யா ராவ்

 

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் மீது கடுமையான அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) 1974 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ரன்யா குறைந்தது ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெறத் முடியாது, அவர் மீண்டும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேர் –நடிகர் தருண் ராஜு மற்றும் சாஹில் சகரியா ஜெயின் – மீதும் COFEPOSA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 3 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ரன்யாவை கைது செய்தது.

தொடர்ச்சியான சோதனையில், அவரது இல்லத்திலிருந்து ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் ரூ.2.67 கோடி ரொக்கமும் மீட்கபட்டது. ரன்யா தற்போது பெங்களூரு மத்திய சிறையில் ராஜு மற்றும் ஜெயினுடன் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையாளர்களின் கூற்றுப்படி, ஜெயின் ராவ் ரூ.40 கோடி மதிப்புள்ள 49.6 கிலோகிராம் கடத்தப்பட்ட தங்கத்தை அப்புறப்படுத்த உதவினார், மேலும் ஹவாலா வழிகளில் துபாய்க்கு சுமார் ரூ.38.4 கோடியை சட்டவிரோதமாக மாற்றவும் உதவினார்.

இந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இரண்டும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. சர்ச்சையைத் தொடர்ந்து அரசாங்கத்தால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் மூத்த காவல்துறை அதிகாரி கே. ராமச்சந்திரா. இவரின்’ இரண்டாம் மனைவியின் மகள் தான் நடிகை’ ரன்யா.

What do you think?

பல நாள் கனவு நிறைவேறி உள்ளதற்கு நன்றி நடிகர் கவின்

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து விழிப்புணர்வு