இசையமைப்பாளரை கரம் பிடித்த நடிகை கிரேஸ் ஆண்டனி
கிரேஸ் ஆண்டனி தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்ததற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தமிழில் பறந்து போ என்ற படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இசையமைப்பாளர் அபி டாம் சிரியாக்கை செப்டம்பர் 9 ஆம் தேதி தங்கள் நெருங்கிய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவின் துதியூரில் உள்ள (Our Lady of Dolours Roman Catholic Church in Thuthiyoor, Kerala ) லேடி ஆஃப் டோலர்ஸ் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
நேற்று கிரேஸ் இன்ஸ்டாகிராமில், தனது ஒன்பதாண்டு கால காதல் கைகூடியதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


