in

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் கேஸ் முடிவுக்கு வந்தது


Watch – YouTube Click

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் கேஸ் முடிவுக்கு வந்தது

சிவாஜி கணேசனின் மூதாதையர் இல்லமான “அன்னை இல்லம்” தொடர்பான வழக்கு, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

சிவாஜியின் பேரன் துஷ்யந்திற்குச் சொந்தமான ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான கடன் தகராறில், தனபாக்கியம் எண்டர்பிரைசஸுக்கு கொடுக்க வேண்டிய ₹3.74 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அன்னை இல்லம் பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தது..

சிவாஜியின் மகனான நடிகர் பிரபு, இந்த வழக்கில் தலையிட்டு, அன்னை இல்லத்தின் முழு உரிமையையும் உறுதிப்படுத்தி, பறிமுதல் உத்தரவை எதிர்த்து appeal செய்தார்.

தனது சகோதரரின் கடனில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சொத்து சட்டப்பூர்வமாக தனக்குச் சொந்தமானது என்றும் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தனது சகோதரிகளுடன் சேர்ந்து அன்னை இல்லத்தில் இருந்த தங்கள் பங்குகளை பிரபுவுக்கு விடுதலைப் பத்திரம் மூலம் மாற்றி, பிரபுவை ஒரே உரிமையாளராக மாற்றியதை உறுதிப்படுத்தும் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.

ஜூன் 24, 2025 இன்று, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு ஏற்பட்டுவிட்டதாகவும் , மேல்முறையீட்டை வாபஸ்பெறுவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, கோரிக்கையை கோர்ட் ஏற்றுக்கொண்டு . பிரபுவின் உரிமையை அங்கீகரித்து, உயர் நீதிமன்றம் பறிமுதல் உத்தரவை நீக்கி கேஸ்..சை முடித்தனர்.

What do you think?

ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

சிகப்பு ரோஜாக்கள் சினிமா போல், திரில்லிங்காக இருக்கும் மார்க்கன் சினிமா.