கெனிஷாவுடன் இலங்கைக்கு சென்ற நடிகர் ரவி மோகன்
Watch – YouTube Click ![]()
தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக அறிவித்த நடிகர் ரவி மோகன், தற்போது பாடகி கெனிஷாவுடன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
சமீபகாலமாக இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதால், அவர்களின் உறவு குறித்த வதந்திகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கெனிஷா சமீபத்தில் தனது ‘அண்டும் இட்னம்'( ‘Andum Idnum’,) பாடலுக்கான இசை வீடியோவில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்தார், அவரே இசையமைத்து பாடினார். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துஉள்ளளார்.
கெனிஷாவுடன், நடிகர் ரவி மோகனும் இலங்கைக்கு பயணம் செய்தார். இருவரும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்தை நேரில் சந்தித்து பேசினர்.
உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
அமைச்சருடனான இந்தசந்திப்பு, இலங்கையின் கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா தளங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்காக இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட தயாரிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகனுக்கும் கெனிஷாவுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து கோலிவுட் வட்டாரங்களில் சிசுசிசுக்க தொடங்கியுள்ளது.


