திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் மாதவன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் அவர் சுவாமியை வழிபட்டார்.
தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து ஆலயத்திற்கு வெளியே வந்த நடிகர் மாதவனிடம் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர் ஒரு சிறுவன் மாதவனிடம் ஆட்டோகிராப் கேட்டு வாங்கினார்.


