நடிகர் கிருஷ்ணா கைது; கண்காணிப்பு வளையத்தில் சிக்கிய இரண்டு நடிகைகள்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் விசாரணைக்கு பயந்து தலைமறைவான நடிகர் கிருஷ்ணா நேற்று போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார்.
நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிருஷ்ணாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நானும் ஸ்ரீகாந்த்தும் நல்ல நண்பர்கள் ஆனால் ஸ்ரீகாந்த் என்னை பற்றி சொன்னதெல்லாம் தவறான தகவல்கள் எனக்கும் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனக்கு இறப்பை அயர்ச்சி நோய் இருப்பதால் போதை பொருள் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது.
இவரின் மருத்துவ பரிசோதனை முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீகாந்த இடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் எண்ணம் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
போதை பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரபல இசையமைப்பாளர் பத்து நடிகர் நடிகைகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர்களையும் விரைவில் போலீசார் விசாரிக்க உள்ளனர்.


