in

நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு

நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு

Comedy நடிகர் கவுண்டமணியின் மனைவியின் இன்று காலை காலமானார்.

கவுண்டமணி பாரதிராஜாவின் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்தவர்.

45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். செந்தில் கவுண்டமணி Combination…னில் வந்த காமெடிகள் இன்று வரை ரசிகர் மனதை விட்டு நீங்காதவை குறிப்பாக சத்யராஜ் உடன் இவர் இணைந்து நடித்த மலபார் போலீஸ், ரிக்க்ஷா மாமா, சூப்பர் டுப்பர் ஹிட்.

கவுண்டமணி சாந்தியை 1963ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவரின் மனைவி சாந்தி இன்று காலை 10.30 மணி மணி அளவில் மறைந்தார்.

அவருக்கு வயது 67 அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செய்து வருகின்றனர்.

What do you think?

நடிகை பெருமாயி பாட்டி காலமானார்

சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த சிநேகன்