in

அகில இந்திய அளவில்  ஐ.ஐ.டி., – ஜெ.இ.இ., முதல்நிலை தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை 

அகில இந்திய அளவில்  ஐ.ஐ.டி., – ஜெ.இ.இ., முதல்நிலை தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை 

அகில இந்திய அள வில் நடைபெற்ற ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. முதல்நிலை தேர்வில் 13 லட்சத்து 55ஆயிரத்து 293 மாணவர்கள் பங்கேற்றனர். இத் தேர்வு முடிவு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வில் பங்கேற்ற புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர் கார்த்திகேயன் 99.963 சதவீதம் பெற்று புதுச் சேரி அளவில் முதலிடம் பிடித்து மாநிலத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

மாணவர்கள் கிரிஷ், தருனேஷ், சாய்பிரேம், பிரித்தீஷ், அபினவ், தருண்ராஜ், மாணவி கீர்த்தி 99.958, 99.951, 99.929, 99.905, 99.876, 99.636,சதவீ தம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

அதிக பட்சமாக 99.9 சதவீதம், அதற்குமேல் 5 மாணவர்களும், 99.5 சதவீதம் அதற்குமேல் 8 மாணவர்களும், 95.0 சதவீதம் அதற்குமேல் 45 மாணவர்களும், 90.0 சதவீதம் மற்றும் அதற்குமேல் 72 மாணவர்களும் மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந் தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

பள்ளி நிறுவனர் கூறு கையில், ‘இந்தாண்டு ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில்19 பேர், இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரியில் 16 பேர், அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லுாரி யில் 68 பேர், ஐ.ஐ.டி.,யில் 15 பேர், என்.ஐ.டி. 35 பேர், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். 1, சி.ஏ., சி.எம்.ஏ., புவுண்டேசனில் 169 பேர், சி.ஏ., சி.எம்.ஏ., இன்டரில் 110 மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

பள்ளியில் மருத்துவம், பொறியியல், வர்த்த கம், பட்டய கணக்காளர் ஆகிய நுழைவுத் தேர்வு களுக்கு நீட், ஜே.இ.இ., ஜிப்மர், சி.ஏ., பயிற்சி 6ம் வகுப்பு முதல் மாண வர்களுக்கு கற்பிக்கப் படுகிறது’ என்றார். நிகழ்ச்சிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு வேற லெவல் குட் நியூஸ்

மியூசிக் லவர்ஸுக்கெல்லாம் ஒரு வேற லெவல் நியூஸ் வந்திருக்கு