கோரிக்கையை ஏற்று நடிகை M.N. Rajam…… அம்மாவை சந்தித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
பழம்பெரும் நடிகை M.N. Rajam அவர்கள் நேற்று முன்தினம் தனது 90…ராவது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆன பிறகு நான் சந்திக்கவில்லை அவரை நான் சந்திக்க வேண்டும் என்று தினத்தந்தி நிருபவர்கள் பேட்டி எடுக்கும்போது கூறினார்.
இதை நீங்கள் தான் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். உடல்நலம் சரியில்லாமல் இருந்த போதும் இந்த செய்தியை பார்த்தவுடன் முதலமைச்சர் அவர்கள் தனது மனைவி துர்கா அவர்களுடன் நேற்று மாலை M.N. Rajam அவர்கள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.
அவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியம், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் சென்றனர். வீட்டிற்கு வந்த முதலமைச்சர் அவர்களை வரவேற்று M.N. Rajam அம்மாவின் அறைக்கு அவரது மகன் அழைத்துச் சென்றார் அவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்த M.N. Rajam அம்மாவின் கைகளை மு க ஸ்டாலின் அவர்கள் பிடித்து நலம் விசாரித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் இப்பொழுது மகிழ்ச்சியா என்று புன்னகையுடன் கேட்க பல மேடைகளில் பல நிகழ்ச்சிகளில் உங்களை பார்த்து உள்ளேன் உங்கள் தந்தை கருணாநிதி மறைவு..வுக்கு கூட உங்கள் இல்லத்துக்கு வந்து உங்களை பார்த்து பேசினேன் ஆனால் முதலமைச்சரான பிறகு உங்களை நான் பார்க்கவில்லை.
வயதாகி விட்டதால் என்னால் உங்களை வந்து பார்க்க முடியவில்லை என் விருப்பத்தை ஏற்று என்னை பார்க்க வந்தது எனக்கு மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் அளிக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.


