தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் ராசிபுரம் அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஶ்ரீ அகோரமூர்த்தி காலபைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பைரவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து பைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் 8 தீப்பந்தங்களுக்கு நடுவில் அருள்பாலித்தார்.

பூஜையில் இராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம் சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பூஜைகளை தலைமை அர்ச்சகர் விஜயகுமார முன்னின்று நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


