in

கந்த சஷ்டி விழா திருவிழா 3ம் நாள் அபிஷேகம்

கந்த சஷ்டி விழா திருவிழா 3ம் நாள் அபிஷேகம்

 

 

மேலக்கோட்டைவாசல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா திருவிழா 3ம் நாள் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மேலவாசல் அருள்மிகு பிரசன்ன விநாயகா் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வெள்ளையா் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று வெள்ளையாின் காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது.

கோட்டையின் கீழே விநாயகா் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது. காலப்போக்கில் கோட்டை சிதலமைடைந்தாலும் இக்கோவில்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது.

இங்கு அருள்மிகு பிரசன்ன விநாயகா் மற்றொன்றில் ஸ்ரீ வள்ளி தேவவேனா சமேதஸ்ரீ சுப்பிரமணியசுவாமி அருள்பாலிக்கின்றனா். மேலும் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாா் . இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்த ஆண்டுக்காண கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி தொடங்கியது. தினமும் காலையில் யாகசாலை பூஜைகளுடன் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சஷ்டி திருவிழாவின் 3ம் நாளைன இன்று காலை நடை திறக்கப்ட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சஷ்டி மண்டபத்தில் கும்ப பூஜை டைபெற்றது. தொடாந்து யாகசாலையில் சங்கல்பம் மூலமந்திர ஹோமங்கள் பூர்ணாகுதி நடைபெற்றது.தொடா்ந்து ஊச்சிக்கால பூஜைக்காக மூலவா் மற்றும் ஆறுமுகருக்கு 16வகை அபிஷேக பொருட்களான மாபொடி, மஞ்சள் பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிருதம், தேன், இனநீா், கரும்புச்சாறு வீபூதி, அண்ணம் பன்னீா் சந்தணம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் கலசங்கள் பூஜிக்கப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தாிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட அவலம்

திண்டிவனம் இரட்டணை ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா திருக்கல்யாணம்