விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் வைத்த ஆமிர் கான்
நடிகர்-தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவின் மகளுக்குப் பெயரிடுவதற்காக ஆமிர் கான் ஹைதராபாத் சென்றார்.
விஷ்ணு விஷால் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின் ஜ்வாலா கட்டாவை திருமணம் செய்தார்.
இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளநிலையில் ஜ்வாலா..விற்கு சில மாதங்களுக்குமுன் பெண் குழந்தை’ பிறந்தது. இந்த ஜோடி தங்கள் குடும்பப் படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் செய்தனர்.
சூப்பர் ஸ்டார் புதிதாகப் பிறந்த குழந்தையை மடியில் வைத்திருக்கிறார். ஆமிர் கான் எங்கள் மகளுக்கு மீரா என்று பெயரிட்டுள்ளார்.., “எங்கள் மிராவை அறிமுகப்படுத்துகிறோம்…எங்கள் குழந்தைக்கு பெயரிட ஹைதராபாத் வரை வந்ததற்காக #அமீர்கான் ஐயாவுக்கு Hug .மீரா என்ற பெயருக்கு நிபந்தனையற்ற அன்பு மற்றும் அமைதி என்று பொருள்.
இதுவரை ஆமிர் சாருடனான எனது பயணம் ஒரு மாயாஜாலம் போல் இருக்கு…எங்கள் மகளுக்கு அழகான பெயரை வைத்ததற்கு நன்றி அமீர் சார். என்று பதிவிட்டுள்ளார்.