in

புவனகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா விமரிசையாக நடைபெற்றது

புவனகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா விமரிசையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்றில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது .கீழ் புவனகிரி சின்னப்பா முதலியார் தெருவில் அமைந்துள்ள தனியார் நர்சரி வித்யாலயா பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .

இதில் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உணவு தானிய வகைகளான பயிறு கொள்ளு எள்ளு கம்பு கேழ்வரகு குதிரைவாலி ராகி சோளம் திணை கருப்பு கவுனி சம்பா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய சிறுதானியங்கள் கொண்டு லட்டு புட்டு வடை கூழ் அல்வா ஐஸ்கிரீம் கேக் பணியாரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன .

இந்த உணவுத் திருவிழாவை பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு உணவுகளை உண்டு ருசித்தனர் . பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் விதமாக இது போன்று பாரம்பரிய உணவு திருவிழா நடத்திய பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்

What do you think?

Campa Energy Drink விளம்பர வீடியோ!அஜித்தை கலாய்க்கும் ரசிகர்கள்!விளம்பரத்தை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்.

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு