in

 பெரிய புயலையே கிளப்பியிருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனோட ஒரு பேச்சு


Watch – YouTube Click

 பெரிய புயலையே கிளப்பியிருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனோட ஒரு பேச்சு

 

சமீபகாலமா அரசியல் களத்துல ஒரு பெரிய புயலையே கிளப்பியிருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனோட ஒரு பேச்சு.

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கிறேன்ங்கிற பேர்ல, நடிகை த்ரிஷாவோட பேரை தேவையில்லாம இழுத்து அவர் பேசினது இப்போ அவருக்கு ஒரு பெரிய ‘தலைவலி’யை கொடுத்திருக்கு.

“விஜய், த்ரிஷாகிட்ட இருந்து வெளிய வரணும்.. வீட்ட விட்டு வெளிய வரணும்”னு நயினார் நாகேந்திரன் பேசினது ரொம்ப அநாகரிகமா இருக்குனு சோஷியல் மீடியால விமர்சனங்கள் கிளம்புச்சு.

இதைக் கேட்ட த்ரிஷா சும்மா இருக்காம, வக்கீல் மூலமா ஒரு அறிக்கை விட்டாங்க. “நான் எந்த அரசியல் கட்சியிலயும் இல்ல, எனக்கு அந்த எண்ணமும் இல்ல. என் வேலையைப் பார்த்துட்டு இருக்குற என்னை எதுக்கு தேவையில்லாம இழுக்குறீங்க?

பொதுவெளியில பேசும்போது கொஞ்சம் பொறுப்போட பேசுங்க”னு நயினாருக்கு ‘நச்’ பதில் கொடுத்திருந்தாங்க. இந்த விஷயம் பாஜகவோட கண்ணியத்தையே குறைச்ச மாதிரி இருக்குனு மத்த தலைவர்கள் எல்லாம் டென்ஷன் ஆயிருக்காங்க.

நேத்து நயினாரைச் சந்தித்த அண்ணாமலை: நீங்க ஒரு உயர்ந்த பதவியில இருக்கீங்க. த்ரிஷா-விஜய் பத்தி இப்படிப் பேசியிருக்கக் கூடாது. இது நம்ம கண்ணியத்தையே குறைச்சிடுச்சு, தயவுசெஞ்சு வருத்தம் தெரிவிச்சிடுங்க”னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி அனுப்பிட்டாராம்.

எல்லா பக்கமும் இருந்து அழுத்தம் அதிகமானதால, இன்னைக்கு நெல்லையில நிருபர்களைச் சந்திச்ச நயினார் நாகேந்திரன்: என் அரசியல் வாழ்க்கையில யாரையும் தனிப்பட்ட முறையில விமர்சிச்சது இல்ல.

அன்னைக்குத் தெரியாம வந்த ஒரு வார்த்தை யாருக்காவது மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தா, அதுக்கு நான் மனப்பூர்வமா வருத்தம் தெரிவிச்சுக்கிறேன்”னு சொல்லிட்டாரு.


Watch – YouTube Click Shorts

What do you think?

‘தளபதி’ விஜய் சின்ன வயசு போட்டோ வைரலாகுறது

Бонусы на день рождения в онлайн‑казино: как сделать праздник ярче