in

9 டன் எடை கொண்ட ஒரே கல்லில் ஒன்பது அடி உயரமுள்ள சுவாமி சிலை

9 டன் எடை கொண்ட ஒரே கல்லில் ஒன்பது அடி உயரமுள்ள சுவாமி சிலை

 

9 டன் எடை கொண்ட ஒரே கல்லில் ஒன்பது அடி உயரமுள்ள சுவாமி சிலைகள் பழனியில் உள்ள சிற்பக் கலையகத்தில் செய்யப்பட்டது.

திண்டுக்கல் பகுதியில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் மாசி மலையாள கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அமைப்பதற்காக ஒன்பது டன் எடை கொண்ட ஒரே கருங்கல்லில் ஒன்பது அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி மற்றும் மதுரை வீரன் குதிரை வாகன சிலைகள் மற்றும் விநாயகர் சிலைகள் முருகன் வள்ளி தெய்வானை என ஒன்பது சிலைகள் பழனியில் உள்ள சிற்பக் கலையகத்தில் கடந்த ஓராண்டாக வடிவமைக்கப்பட்டு வந்தது.

பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று கோயில் நிர்வாக செயலாளர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் லாரிகள் மூலம் அதனை தங்களின் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.

முன்னதாக சிற்பக் கலையகத்தில் சிலைகளுக்கு மாலையில் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டு விழாவிற்காக சிலைகள் கொண்டு செல்வதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென் தமிழகத்திலேயே இதுவரை 9 டன் எடை கொண்ட ஒரே கருங்கல்லில் 9 அடி உயரம் உள்ள சிலைகள் அமைக்கப்படுவது இதுவே முதன்முறையின சிற்பக் கலைக் கூட சிற்பிகள் தெரிவித்தனர்.

பிரம்மாண்டமான சிலைகளை லாரி மூலம் ஏற்றி செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

What do you think?

ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைத்த 3000 அரிய வகை மரக்கன்று

அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள்