சோஷியல் மீடியாவுல இப்போ தனுஷ் – நயன்தாரா சண்டை தான் பயங்கர ஹாட் டாபிக். ஆனா, இந்த நேரத்துல நயன்தாரா ரசிகர்கள் ஒரு பழைய வீடியோவை தூசு தட்டி எடுத்து வைரல் பண்ணிட்டு இருக்காங்க.
அதுல தனுஷ், நயன்தாராவைப் பத்தி அவ்ளோ பெருமையா பேசியிருக்காரு!ஒரு பழைய பேட்டியில டிடி அக்கா தனுஷ் கிட்ட, “த்ரிஷா, நயன்தாரா.. இதுல யார் ரொம்ப அழகு?
“ன்னு ஒரு குசும்பு பிடிச்ச கேள்வியைக் கேட்டாங்க. அதுக்கு தனுஷ் கொஞ்சம் கூட யோசிக்காம, பயங்கரமா சிரிச்சுக்கிட்டே “நயன்தாரா தான்!”னு
சொல்லிட்டாரு. அதுமட்டும் இல்லாம, நயன்தாராவோட தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மத்தவங்களை அவங்க பார்த்துக்கிற விதம் இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு வேற ஒரு மேடையில உருகியிருக்காரு தனுஷ்.
தனுஷ் தயாரிப்புல சிவகார்த்திகேயன் நடிச்ச ‘எதிர்நீச்சல்‘ படத்துல ஒரு பாட்டுக்கு நயன்தாரா வந்து ஆடுனாங்க ஞாபகம் இருக்கா? அந்தப் பாட்டுக்கு நயன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கலையாம்!
தனுஷ் மேல இருந்த நட்பாலயே வந்து ஆடிக்கொடுத்திருக்காங்க. அப்போ தனுஷ் – நயன் நட்பு அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருந்துருக்கு.விக்கி இயக்கின ‘நானும் ரௌடி தான்’ படத்தை தனுஷ் தயாரிச்சப்போ தான் பிரச்சனை ஆரம்பிச்சது.
ஷூட்டிங் ஸ்பாட்ல விக்கிக்கும் நயனுக்கும் காதல் வந்ததால, வேலையில கவனம் சிதறி பட்ஜெட் எகிறிடுச்சுன்னு தனுஷ் செம கடுப்பானாரு. அங்க ஆரம்பிச்ச விரிசல் தான் இப்போ வரைக்கும் புகைஞ்சுட்டு இருக்கு.
ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட புரமோஷன்ல விக்கி இப்போ ஒரு உருக்கமான விஷயத்தைச் சொல்லிருக்காரு. “தனுஷை நான் என்னோட அப்பா ஸ்தானத்துல வச்சிருக்கேன்.
எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல, ஆனா எதுவுமே இல்லாமலேயே ஒரு பிரிவு வந்துடுச்சு.
அதை நினைச்சா வருத்தமா இருக்கு”ன்னு பேசியிருக்காரு. அன்னைக்கு “அழகு”ன்னு சொன்ன தனுஷுக்கும், “நண்பேன்டா”ன்னு இருந்த நயன்தாராவுக்கும் நடுவுல இப்போ கோர்ட் கேஸ் வரைக்கும் போயிருக்கிறது ரசிகர்களைக் கவலையில ஆழ்த்தியிருக்கு. இவங்க மறுபடி ஒண்ணா சேருவாங்களா?


