in

விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் 43.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் 43.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயம், காசி விஸ்வநாதர் கோயில் ஆகும். கங்கை, யமுனை உள்ளிட்ட நவகன்னியர்கள் தங்கள் பாவங்களைப் போக்க வழிபட்ட தலம். 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில், காசி விஸ்வநாதரை மூலவராகவும், விசாலாட்சியை அம்மனாகவும் கொண்டுள்ளது.

மாசி மகம் விழா இங்கு சிறப்பானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் மாசிமகம் திருவிழாயன்று சப்பரத்தேர் மட்டும் இயக்கப்பட்டது. இந்நிலையில் 90 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து சமய அறநிலையத் மற்றும் உபதாரர்கள் 47 லட்சம் மதிப்பீட்டில் 16 உயரம் 16 நிலம் 52 டன் எடையுள்ள புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தேர் வெள்ளோட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் காசிவிஸ்வநாதர், காசிவிஸ்வநாதர் என்று முழக்கமிட்டபடி தேரை இழுத்து வந்தனர்.

What do you think?

சூர்யாவோட நடிப்புக்கு 4 விருதுகள்