கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதிய வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் வனத்துறை ஊழியர்கள் ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி செயலர்கள் ஆகியோர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்கிட வேண்டும் மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்கி உண்மையான காசில்ல மருத்துவத்தை உறுதிப்படுத்துக கம்யூடேசன் பிடித்த காலத்தை 1 ஆண்டுகளாக குறைத்திடுக.
உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட துணைத் தலைவர் தங்க வளவப்பன், தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பக்கிரி சாமி, மாநில செயற்குழு ராஜகோபாலன், பொருளாளர் ராமமூர்த்தி, வட்டத் தலைவர் துரைராஜ், இணை செயலாளர்கள் சாரங்கன், மல்லிகா, மகளிர் அணி கலைச்செல்வி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


