கீழடியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உயர்ந்த நாகரிகத்தை மறைத்திட முயற்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி பேட்டி
மதுரை செய்தியாளர்கள் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்த அடையாளம் இரும்பு கண்டுபிடிப்பை தான் காண்பிக்கிறது அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான இனமாக தமிழினமும் தமிழ் மொழியும் திகழ்கிறது. இதன்படி கீழடியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் படி முதல் மாந்தன் பிறந்த ஊர் தமிழ்நாடு என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது
இரண்டு அகழாய்வுகளை மட்டும் நிதி ஒதுக்கி நடத்திய ஒன்றிய அரசு அதன் பிறகு அதற்காக நிதி கூட ஒதுக்க மனமில்லாமல் இருந்தது ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற 9 ஆய்வுகளுக்கும் நிதி ஒதுக்கி அதன் முடிவுகளையும் வெளிப்படையாக அறிவித்தார்
ஆனால் ஒன்றிய பாஜக அரசின் சரஸ்வதி நாகரிக கட்டமைப்பு உடைந்து விடும் என்ற பயத்தோடு இந்த அறிக்கையை வெளியிட தொடர்ந்து தாமதித்து வருகின்றனர் மாண்பமை நீதி அரசர் கண்டனம் தெரிவித்தும் கூட 16 வாரங்களில் இதனை வெளியிடுவதாக சொன்னவர்கள் 16 மாதங்கள் ஆகியும் வெளியிடாமல் மறுத்து வருகின்றனர் ராமர் பாலம் என்ற கதையை சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறுத்தினார்களோ அதே போன்று கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் வஞ்சித்து வருகிறார்கள் எனவே இதனை கண்டித்து நாளை மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா தலைமையில் நடைபெற உள்ளது
இதில் மாநில மாணவரணி மற்றும் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் மாணவர்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். உலகத் தரமார்ந்த ஆய்வுகளுக்கு பிறகும் கீழடியில் அறிவியல் உண்மை இல்லை என சொல்வது அவர்களின் ஒரு சார்பின்மையை காட்டுவதாக உள்ளதோடு ஊருக்கு ஊர் சென்று தமிழ் மொழியின் பெருமை பேசுவதாக கூறி திருக்குறள் பேசி வரும் பிரதமர் மோடி அவர்களின் வேஷத்தை கலைக்க இந்த ஆர்ப்பாட்டம் துணை நிற்கும் என்றார்


