நெல்லையில் இறைவனைத் தேடும் பயணம் நாட்டிய நிகழ்ச்சி
நெல்லையில் இறைவனைத் தேடும் பயணம் சங்கா்நகா் தனியார் பள்ளி மாணவியாின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் கலந்துகொண்டு நாடடிய நிகழ்ச்சியை கண்டு களித்தனா்.
இறைவனைத் தேடும் பயணம் என்ற தலைப்பில் சங்கா்நகா் ஜெயேந்ரா பள்ளி மாயவிணா்கள் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இயல் இசை நாடகம் தமிழாின் வாழ்வியலில் ஒன்றாக கலந்து உள்ளது.
இறைவனைிடம் நாம் பக்தியினை காட்ட இயலும் இசையும் தேவை. பக்தியினால் இறைவனை அடையலாம் என்று இறைவனைத் தேடும் பயணம் என பரதநாட்டிய நிகழ்ச்சியினை நெல்லை சங்கீத சபாவில் இன்று இரவு நடத்தினா்.
இதில் விநாயகா் முருகன் கிருஷ்ணா் சிவன் பாா்வதி ஆகியோா் மீது பாடல்கள் பாடியபடி பரதநாட்டியம் ஆடினா். இந் நிகழ்ச்சியினை சங்கா்நகா் ஸ்ரீஜெயேந்ர ஸ்வாமிகள் கோல்டன் ஜீப்ளி பள்ளி முதல்வா் உஷாராமன் வழங்கினாா்.
சபா தலைவா் ஆறுமுகம் செயலாளா் நடேசன் துணைத்தலைவா் சந்திரமௌலி பொருளாளா் தளவாய்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுபாஞ்சலி நடனக் கலைப்பள்ளி மாணவ மாணவியா்கள் கலந்துகொண்டு பரதநாட்டியத்தை சிறப்பாக ஆடினா்.