அரசுப் பேருந்து பின்பக்க டயரில் இருந்து புகை வந்ததால் நடுவழியில் நிறுத்தம்.
புவனகிரி அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பின்பக்க டயரில் இருந்து புகை வந்ததால் நடுவழியில் நிறுத்தம். 30க்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
மகளிர் விடியல் பேருந்து என சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்ட பேருந்து பழுதானதால் அதிர்ச்சி.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பேருந்து நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் விடியல் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள சக்கரத்திலிருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.

பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பேருந்து டயர் தேய்மானம் ஆகி, உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது.
இதனால் துர்நாற்றம் ஏற்பட்டதால் அரசு பேருந்து பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பேருந்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பேருந்தை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.


