பொய் வழக்கு போடப்பட்டிருகிறது…நான் யார் என்று நிருபிக்கின்றேன்… சஞ்சனா கல்ராணி
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி செப்டம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் மோசடி வழக்கில் ஈடுபட்டதற்காக, சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது சகோதரி நிக்கி கல்ராணியும் ஒரு மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்சியில் ….சஞ்சனா கல்ராணி போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது என்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் எந்த தவறும் செய்யாமல் என் மீது பொய்யாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் மனநலம் மற்றும் தொழில் பாதித்தது அந்த நேரத்தில் நான் அஜித் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டேன் என் திருமணத்தை கூட மகிழ்ச்சியுடன் வெளியில் அறிவிக்க முடியாத நிலையில் இருந்தேன்.
என் கணவர் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கே காரணம் என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு பொய் என்று நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நான் எப்படிப்பட்டவள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்த விரும்புகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு கூறியிருகிறார்.


