டீ வாங்க சென்றவருக்கு நாய் கடி!!
திருவேற்காட்டில் டீ வாங்க சென்ற கறிக்கடை வியாபாரியை கடித்துக் கொதறிய தெரு நாய்- ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
தறி கெட்டு திரியும் தெருநாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவேற்காடு நகராட்சிக்கு பகுதி மக்கள் கோரிக்கை
திருவேற்காடு ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு இவர் அதே பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார் ஞாயிற்றுக்கிழமையான இன்று கறிக்கடையில் வியாபாரம் செய்திருந்த வடிவேலு டீ வாங்குவதற்காக அருகே உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.
தேநீர் வாங்கிக் கொண்டு மீண்டும் கடைக்கு திரும்ப வடிவேலு இருசக்கர வாகனத்தில் ஏறிய போது திடீரென்று அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று வடிவேலின் காலில் கடித்துள்ளது உடனடியாக காலை உதறிவிட்ட வடிவேல் காலை மீண்டும் கவ்விக்கொண்ட நாய் விடவில்லை அருகில் இருந்தவர்கள் விரட்ட முயன்றும் விடாமல் கவிகொண்ட நாய் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வடிவேலின் காலை விட்டு ஓடியது.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வடிவேலை மீட்டு காடுவெட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அழைத்து சென்று பின்னர் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு கால் பகுதியில் ராபிஸ் தடுப்பு ஊசி போட்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர் இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வடிவேலு கூறுகையில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதாகவும் குறிப்பாக ஈஸ்வரன் கோயில் தெருவில் முப்பதுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதால் சாலையில் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் நடந்து செல்ல அச்சமடைவதாகவும் திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


