கண்டமனூர் அருகே கோழி கழிவுகள் எரிக்கப்படுவதினால் நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே கணேசபுரம் செல்லும் வழியில் சன்னாசியப்பன் எல்லை கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப் பண்ணை அமைந்து உள்ளது கடந்த நான்கு ஆண்டுகளாக கோழி பண்ணை நடத்தி வரும் நிலையில் கோழிக் கழிவுகளையும் வயதான கோழிகளையும் அங்கு அமைத்துள்ள பள்ளத்தில் வைத்து எரித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு உயிருடன் கோழிகளை எரித்ததாக தெரிகிறது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி அக்கம் பக்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளன நிலையில் புகை கழிவுகள் மூக்கு துவாரத்தின் வழியாக சென்று மூக்கில் புண் ஏற்பட்டு வாந்தி வருகிறது என்றும் இந்த கோழிகளை சரியான முறையில் கையாள வேண்டும் என்று விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனார்


