in

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வருகை  ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பூங்கொத்து கொடுத்தனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வருகை 
ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பூங்கொத்து கொடுத்தனர்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 01.00 மணி அளவில் முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள.

உள்ளார் அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக, தூத்துக்குடி வருகிறார்

மாலை 3 மணி முதல் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடைபெறுகிறது.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது.

என காவல் உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடதக்கதுமேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் தூத்துக்குடியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பின்னர் இன்று மாலை 5 மணிக்கு விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை செல்கிறார்.

What do you think?

ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி வைரம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

பாபநாசம் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஏ .எம். ஷாஜகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்…