தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக வேண்டி உத்திரமேரூர் தவெக வேட்பாளர் அப்பன் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை…
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பல்வேறு வியூகங்கள் அமைத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்காக கட்சித் தலைவர் விஜய் அவர்களால் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முனிரத்தினம் அவர்கள் இன்று சனிக்கிழமை முன்னிட்டு திருமுக்கூடலில் உள்ள பிரசித்திபெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் சிறப்பு பூஜை மற்றும் தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் அமோக வெற்றி பெற்று தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சராக அமர வேண்டும் என மனமுருக வேண்டி தரிசனம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்குடி ராகுல், உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தவெக திருமுக்கூடல் கோகுல் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

