in

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கிறது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இருக்கும் தட்டாஞ்சாவடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதற்கு முன்பாக தமிழக – புதுச்சேரி எல்லையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் விஜய் பேசுகையில்,
புதுச்சேரியில் தவெக முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. இங்கே களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன்.

புதுச்சேரியில் 2 கூட்டணி இருக்கிறது. அதனால் நாங்கள் வந்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் இங்கு பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டுமல்ல, அவரின் கட்சித் தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது.

திமுகவும் இங்கே 3 முறை ஆட்சியில் இருந்தது. இப்போது இந்த இரு கட்சிகளும் பெயருக்கு தான் கூட்டணியில் இருக்கிறார்கள்.

ஆனால் சில தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் குழப்பமான கூட்டணியாக உள்ளது.

அதேபோல் இங்கும் குழம்பி போன கூட்டணியாகவே தொடர்கிறது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி இருக்கிறது.

அது கூடி சேர்ந்த கூட்டணி இல்லை.. அது சோர்ந்துபோன கூட்டணி.. இதனிடையே தவெகவை வைத்து வேறு அரசியல் செய்தார்கள்.

இந்த கூட்டணி புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை? தவெக ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து பெற முழுமையாக முயற்சிப்போம். இந்த 2 கூட்டணிக்கும் வாக்களிப்பது வேஸ்ட்.

புதுச்சேரிக்கு நல்லாட்சி வேண்டும். தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.. இந்த விஜய் உங்களுக்கு துணையாக இருப்பேன். தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையணும் என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி.

விஜய்யை ஆதரிக்கும் சிபிராஜ்..விமர்சிக்கும் திவ்யா!” சத்யராஜ் குடும்பத்தில் அரசியல் யுத்தம்?